கொக்கெய்ன் போதைப்பொருளை வயிற்றுக்குள் கடத்த முயன்ற உகாண்டா நாட்டு பிரஜை கைது

#SriLanka #ARREST #Airport #Uganda #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
கொக்கெய்ன் போதைப்பொருளை வயிற்றுக்குள் கடத்த முயன்ற உகாண்டா நாட்டு பிரஜை கைது

சுமார் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளைக் கொண்ட சுமார் 90 காப்ஸ்யூல்களை (capsules) இலங்கைக்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒருவர், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான உகாண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயியான இவர், கட்டாரின் தோஹா நகருக்குப் பயணிப்பதற்கு முன்னதாகவே உகாண்டாவின் என்டெப்பே (Entebbe) பகுதியில் வைத்து இந்தக் கொக்கெய்ன் காப்ஸ்யூல்களை விழுங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் QR-664 விமானம் மூலம் நேற்று முன்தினம் (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த அவர், மதியம் வரை விமான நிலையத்தின் முதலாவது தளத்திலேயே தங்கியிருந்துள்ளார். 

சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமான நிலையத்திற்குள்ளேயே தான் விழுங்கியிருந்த கொக்கெய்ன் காப்ஸ்யூல்களில் 13-ஐ வெளியே எடுத்தபோது அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டார். 

அத்துடன், அவர் விழுங்கியதாகக் கூறப்படும் ஏனைய கொக்கெய்ன் காப்ஸ்யூல்களை வெளியே எடுக்கும் நடவடிக்கைகளுக்காக அவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4