எல்நினோ தாக்கம் - 08 மாவட்டங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிப்பு

#SriLanka #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Dry weather #ElNINO
Thamilini
2 hours ago
எல்நினோ தாக்கம் - 08 மாவட்டங்களைச் சேர்ந்த 161,451  பேர் பாதிப்பு

எல்நினோ தாக்கத்தால் நாட்டின் 08 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) இன்று (12) காலை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 36 பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs) இந்த எல் நினோ வானிலை நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

 இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாகக் குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 அதன்படி, பாதிக்கப்பட்ட 36 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 141,312 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4