நடிகர் சிவகார்த்திகேயனை முதலமைச்சர் என அழைத்த ரசிகர்கள்
#Tamil Nadu
#Actor
#TamilCinema
#LANKA4
#ChiefMinister
#Sivakarthikeyan
#L4
Prasu
2 hours ago
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டும் என தாய்கிழவி இயக்குநருடன் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்துள்ளார்.
இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார், இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிய, படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தன் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினார்.
அதில் அவர் பேசும் போது ரசிகர்கள் அனைவரும் 'வருங்கால முதல்வர் SK' என கூச்சலிட, சிவகார்த்திகேயன் உடனே தன் கையை காட்டி அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் என அன்பாக செய்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
சமீப காலமாக எந்த நடிகரின் ரசிகர்கள் சந்திப்பு நடந்தாலும் இப்படியொரு கூச்சல் வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே