விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்

#SriLanka #LANKA4 #technology #Ministry #Secretary #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்

கொழும்பு: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ரோஷனி திசாநாயகவிடம் கையளித்தார்.

கலாநிதி ரோஷனி திசாநாயக, இதற்கு முன்னர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

புதிய நியமனத்தைத் தொடர்ந்து, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக நடவடிக்கைகளில் அவர் முக்கிய பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4