யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் புதிய திருப்பம்!

#SriLanka #Case #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #YoshithaRajapaksa #Money laundering
Lakhi
2 hours ago
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் புதிய திருப்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசதரப்புச் சாட்சியாளர் ஒருவர் தொடர்பில் முக்கிய விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசதரப்புச் சாட்சியம் அளித்த பாலித்த கமகே என்பவர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம், அவர் முன்னதாக காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்துடன் முரண்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்திற்கும், காவல்துறையிடம் முன்னதாக வழங்கிய வாக்குமூலத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதால், அரசதரப்புச் சாட்சியாளர் பொய் சாட்சியம் வழங்கியிருக்கலாம் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, குறித்த சாட்சியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது ஏற்பட்ட இந்த புதிய நிலைமை, யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், அரசதரப்புச் சாட்சியாளர் பாலித்த கமகேவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4