வடக்கு, கிழக்கு மற்றும் மேலும் சில பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

#SriLanka #Warning #heat #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
வடக்கு, கிழக்கு மற்றும் மேலும் சில பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இதன்படி, இன்று (11) பகல் வேளையில் வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பநிலை உச்சம் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது 'வெப்பத் தசைப்பிடிப்பு' (heat cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4