சீனாவில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
#China
#Death
#LANKA4
#fire
#Rescue
#Ship
#L4
Prasu
4 hours ago
சீனத் துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடப்பட்டிருந்த, வெளிநாட்டுப் பதிவு கொண்ட சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஆரம்பத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் அடங்குவர் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
கிழக்கு சீனாவில் உள்ள முக்கிய கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவ் (Qingdao) பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டபோது, அதில் மொத்தம் 42 பேர் இருந்ததாக அரசுக்குச் சொந்தமான சிசிடிவி (CCTV) தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பராமரிப்புப் பணிக்காகத் துறைமுகத்திற்கு வந்திருந்த அந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) முன்னதாகத் தெரிவித்தது; ஆனால் தீ விபத்துக்கான காரணத்தை அது குறிப்பிடவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே