ஜனாதிபதியின் கவனத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொண்டு சென்ற 8 முக்கிய விடயங்கள்

#SriLanka #Muslim #LANKA4 #President #AnuraKumaraDissanayake #L4
Prasu
1 hour ago
ஜனாதிபதியின் கவனத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொண்டு சென்ற 8 முக்கிய விடயங்கள்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்.
  • முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சுகள்.
  • தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவித்தல்.
  • அரபுக் கல்லூரிகளை பதிவு செய்தல் மற்றும்ஒ அல்-ஆலிம் பரீட்சைகளை மீண்டும் நடாத்துதல்.
  • அரச உயர் பதவிகளுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பொருத்தமான முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்.
  • முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத் திருத்தத்தை முறையாக செய்தல்.
  • கோவிட் 19 தொற்று காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கான நீதி மற்றும் அது தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றினை கோரல்.
  • அரச துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மத கலாசார வரையறைகளைப் பேணுவதில் காட்டப்படும் பாரபட்சங்களை இல்லாமலாக்குதல்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

இச்சந்திப்பின் போது, கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்விடயங்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதுடன் உரிய தரப்புகளோடு கலந்துரையாடி விரைவில் சாதகமான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4