கலாசார அடையாளத்துடன் வாழ்வதற்கு அச்சம் அடையத் தேவையில்லை - ஜனாதிபதி அநுர

#SriLanka #Muslim #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Religion #L4
Prasu
2 hours ago
கலாசார அடையாளத்துடன் வாழ்வதற்கு அச்சம் அடையத் தேவையில்லை - ஜனாதிபதி அநுர

எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் ரீதியாக செயற்படும் இனவாதப் போக்குகள் மற்றும் உள்ளக மோதல்களின் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு, மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதுடன், சீருடைப் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் மீண்டும் தலைதூக்குவதைச் சரியாகப் புரிந்து கொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4