பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் விபத்து - 22 பேர் வைத்தியசாலையில்
#SriLanka
#Accident
#Polonnaruwa
#Bus
Thamilini
1 hour ago
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் 22 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெதிரிகிரியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வாய்க்காலில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே