வாகன இலக்கத் தகடுகள் அனைத்தும் 06 மாதக் காலத்திற்குள் வழங்கப்படும்
#SriLanka
#vehicle
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#DMT
#NUMBER PLATES
Thamilini
1 hour ago
வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அனைத்து இலக்கத் தகடுகளும் ஆறு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள அனைத்து இலக்கத் தகடுகளையும் வழங்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் வாகனப் பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே இலக்கத் தகடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படைத் துணை மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே