15 வருடங்களுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள சூர்யாவின் திரைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சூர்யா, நஸ்ரியா நடிக்கும் 'சூர்யா 47' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'ஆவேஷம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'சூர்யா 47' படத்துக்கு 'சீன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் 'சீன்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடிப்பில் 2011ம் ஆண்டு 7ம் அறிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே