அநுரவின் கடைசி கெடு - இடிக்கப்படப்போகும் போதை தாதாக்களின் 19 கட்டிடங்கள்

#SriLanka #Colombo #LANKA4 #AnuraKumaraDissanayake #Building #illegal #L4
Prasu
2 hours ago
அநுரவின் கடைசி கெடு - இடிக்கப்படப்போகும் போதை தாதாக்களின் 19 கட்டிடங்கள்

பம்பளப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையிலான கடற்கரைத் பகுதியில் (Marine Drive) சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 19 கட்டிடங்களை உரிமையாளர்கள் இன்றைக்குள் (09) அகற்றாவிட்டால், நாளை (10) முதல் புல்டோசர்கள் மூலம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் எச்சரித்துள்ளது.

8 நபர்களுக்குச் சொந்தமான இந்த 19 சட்டவிரோதக் கட்டிடங்களை அகற்றுவதற்கான கட்டளைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதில், டுபாயில் மறைந்திருந்து அண்மையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான 5 சொகுசு உணவகங்களும் (Hotels) அடங்குகின்றன. 

இன்றைக்குள் உடமைகள் மற்றும் கட்டிடங்களை அகற்றத் தவறினால், எவ்வித முன்அறிவிப்புமின்றி திணைக்களத்தின் மூலம் அவை இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4