‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
#Actor
#TamilCinema
#LANKA4
#Movie
#Politician
#L4
Prasu
2 hours ago
தாய்க்கிழவி படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிவகுமார் முருகேசன் தற்போது 'சேயோன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சீமானின் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டதை தொடார்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'எல்.ஐ.கே.' படத்துக்கு பிறகு சீமான் நடிக்கும் படம் இதுவாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே