135 ஏக்கர் தேயிலைத் தோட்ட விவகாரம்: ராஜபக்ச மகன்களுக்கு CID விசாரணை!

#SriLanka #LANKA4 #Tea #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
135 ஏக்கர் தேயிலைத் தோட்ட விவகாரம்: ராஜபக்ச மகன்களுக்கு CID விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயன்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி குறித்த தேயிலைத் தோட்டத்தை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4