ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு..

#world_news #Russia #LANKA4 #Die #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு..

ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் உள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ளதாக அவசரகால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்றக் குழுவினர் மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 50க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷ்ய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வருகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4