பிரித்தானிய தூதரகத்தை மூட இஸ்ரேல் தீர்மானம்

#SriLanka #Israel #Embassy #Britain
Thamilini
3 hours ago
பிரித்தானிய தூதரகத்தை மூட இஸ்ரேல் தீர்மானம்

ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

அத்துடன்  "இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  12 பிரித்தானிய பிரதிநிதிகளும் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்படவுள்ளனர். 

 மேலும் காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள கிரியாட் காட்டில் அமைந்துள்ள "சர்வதேச உதவி மையத்திலிருந்து பிரித்தானிய பிரதிநிதிகளை வெளியேற்றவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 

 இஸ்ரேலின் மேற்கு கரையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்ததை தொடர்ந்து இஸ்ரேல் இந்த பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4