நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
#SriLanka
#Earthquake
#Nepal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
நேபாளத்தின் சில பகுதிகளைப் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, நேற்று இரவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது முஸ்தாங் (Mustang) மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலநடுக்கம் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கி.மீ தொலைவில் உள்ள முஸ்தாங் பகுதியின் லோமந்தாங் (Lomanthang) என்ற இடத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் மனாங் (Manang), டோல்பா (Dolpa) மற்றும் மியாக்டி (Myagdi) மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே