அரசு பல்கலைக்கழக அமைப்பில் நெருக்கடி நிலை - போராட்டத்தில் இறங்கும் விரிவுரையாளர்கள்

#SriLanka #Protest #strike #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
அரசு பல்கலைக்கழக அமைப்பில் நெருக்கடி நிலை - போராட்டத்தில் இறங்கும் விரிவுரையாளர்கள்

அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான கல்விசார் பணியாளர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் வாய்ப்பை இழக்கக்கூடும் என்ற அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளதாகவும், FUTA-வின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். 

50 புதிய அரசுப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை ஜனாதிபதி அறிவித்திருந்தாலும், தற்போதுள்ள 17 அரசுப் பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் FUTA வலியுறுத்தியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4