நாடாளுமன்றத்தில் அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்!

#SriLanka #Parliament #government #Namal Rajapaksha #LANKA4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
நாடாளுமன்றத்தில் அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்!

கொள்கலன்கள் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் பாரியளவிலான வருமானத்தை ஈட்டியிருக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் முறையாக நிறைவேற்றவில்லை எனவும், நாட்டின் அபிவிருத்தி சரியான பாதையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், விவசாயிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு உரிய மானியங்கள் வழங்கப்படவில்லை என்றும், நெல் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசாங்கம் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கவில்லை என நாமல் ராஜபக்ச மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4