அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி வரிகள் இன்று முதல் அமல்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி வரிகள் அமலுக்கு வந்துள்ளன, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் முரண்பாடை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணி முதல், சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான வரிகள் விதிக்கப்படும்.
இது, இயந்திரங்கள், ஜவுளி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த வரிகளுக்கு இணையாகும்.
இந்த புதிய பதிலடி வரிகள், எஃகு, வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்குப் பொருந்தும்.
"கனடியத் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, வாஷிங்டனின் புதிய வரிகளுக்கு ஈடாக கனடாவும் அதே அளவு வரிகளை விதிக்கும்," என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகஸ்ட் மாத இறுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே