காலியில் ரூ.2.5 இலட்சம் இலஞ்சம்: அதிபர் கைது!
#SriLanka
#LANKA4
#Principal
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
காலியில் இரண்டு பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ.2.5 இலட்சம் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளைக்கு ரூ.3 இலட்சம் என ஆரம்பத்தில் ரூ.6 இலட்சம் கோரிய அதிபர், பின்னர் தொகையை ரூ.3 இலட்சமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் ரூ.1.5 இலட்சம் மற்றும் ரூ.50,000 ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் இரு பிள்ளைகளையும் பாடசாலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்காக மேலும் ரூ.2.5 இலட்சம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்சப் பணத்தைப் பெற முயன்றபோதே அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே