பிற்பகலுக்கு மேல் மாறும் வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
பிற்பகலுக்கு மேல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைக்கு அமைய பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே