விண்வெளி வீரர்களின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நாசா!
விண்வெளி வீரர்களின் மலம் மற்றும் சிறுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உருவாக்கி வருகிறது.
செவ்வாய் போன்ற தொலைதூரக் கோள்களுக்கு மனிதர்கள் பயணிக்கும் எதிர்கால விண்வெளிப் பயணங்களின்போது வளங்களுக்கான தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் விண்வெளி வீரர்களின் கழிவுகளைச் சுத்திகரித்து, அவற்றிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுத்தமான நீரைப் பெறுவதுடன், ஒக்ஸிஜனை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தையும் நாசா ஆய்வு செய்து வருகிறது.
நீண்டகால விண்வெளிப் பயணங்களில் பூமியிலிருந்து கொண்டு செல்ல வேண்டிய நீர் உள்ளிட்ட அத்தியாவசிய வளங்களின் அளவைக் குறைத்து, விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே