நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என அது கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே