மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கிய அமெரிக்கா

#America #Attack #LANKA4 #Warning #Iran #Ship #L4
Prasu
3 hours ago
மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கிய அமெரிக்கா

பிராந்தியத்தில் தனது இரண்டு போர்க்கப்பல்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கார்க் தீவுக்கு அருகே ஒரு கப்பலையும், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே மற்றொன்றையும் நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்ததாகவும் ஓமான் வளைகுடாவில் மூன்றாவது கப்பலை முற்றிலுமாக அழித்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) குறிப்பிட்டுள்ளது.

ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) நடத்திய பல தாக்குதல்களை "வெற்றிகரமாகத் தவிர்த்ததாக" சென்ட்காம் தெரிவித்துள்ளது.

சென்ட்காம் அமைப்பின் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர், வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ஐ.ஆர்.ஜி.சிக்கு ஒரு தெளிவான செய்தி: நீங்கள் எங்கள் இரண்டு கப்பல்களைத் தாக்கினால், அதைவிடப் பெரிய பொருளாதார இழப்பை நாங்கள் சுமத்துவோம் - அதாவது, உங்களுடைய மூன்று கப்பல்களை அழிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

US attacks three Iranian oil tankers
Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4