அமெரிக்காவில் பீட்சா கடையில் போதைப்பொருள் கடத்திய 50 வயது இந்தியர்
கலிபோர்னியா நகரில் உள்ள ஒரு பீட்சா கடையில் இருந்து போதைப்பொருள் விநியோகித்ததாக இந்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் 50 வயதான கவல் ப்ரீத் சிங், டினுபாவில் தான் நடத்தி வந்த 'ரவுண்ட் டேபிள் பீட்சா' உணவகத்தில் இருந்து சட்டவிரோத துப்பாக்கிகளை ஏந்தியபடி, மொத்த அளவில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்றுள்ளார்.
கூட்டாட்சி அதிகாரிகள் சிங்கின் வீடு மற்றும் வணிக நிறுவனத்தில் சோதனை நடத்தி, 40 பவுண்டுகளுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன், மூன்று துப்பாக்கிகள் மற்றும் 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்குக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும், கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
போதைப்பொருள் கடத்தலை முன்னிட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, அவர் வேறு எந்தத் தண்டனையுடனும் சேர்த்து, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கட்டாயச் சிறைத்தண்டனையையும், ஆயுள் தண்டனை வரையிலும் எதிர்கொள்கிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே