எல்நினோ தாக்கம் - 8,500 ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிப்பு!! 100,000 வரை இழப்பீடு!
இலங்கையில் நிலவும் எல் நினோ வானிலை காரணமாக, சுமார் 8,000 முதல் 8,500 ஏக்கர் சாகுபடி நிலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில், பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொலன்னருவ மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க அரசாங்கம் ஏற்கனவே சுமார் 3 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக விவசாய மற்றும் வேளாண் காப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ் மற்றும் மிளகாய் உள்ளிட்ட ஆறு பயிர்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய்என்ற விகிதத்தில், ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கர் வரை இழப்பீடு வழங்கப்படும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே