நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது - முழு பின்னணி
இன்றிரவு 8.30 மணியளவில் வெளியான புதிய நீதிமன்ற விவரங்களின்படி, நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக் கடதாசி (Affidavit) முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் கூறியதாவது: Airbus விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணத்தில் US$800,000, நிமல் பெரேரா தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனக் கணக்கிற்கு சென்றதாகவும், அதற்கு சமமான சுமார் ரூ.100 மில்லியன் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Airbus நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நாமல் தரப்பு இந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மையை எதிர்த்து பிணை கோரியிருந்தாலும், தற்போதைய நிலையில் அது பிணை வழங்குவதற்கான போதுமான விசேட காரணமாக இல்லை என நீதவான் தீர்மானித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில் தொடர்கிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே