வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு!
#SriLanka
#today
#LANKA4
#compensation
#drought
#ADDA
#shelvazug
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
56 minutes ago
வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04) முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான இழப்பீடுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளன.
வறட்சி காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே