புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளி 188!

#SriLanka #Examination #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளி 188!

2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளது. 

இந்தப் புள்ளி யாழ்ப்பாண மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி மூலம் அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகள் பதிவாகியுள்ளதுடன், அது குருநாகல் மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையின் அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக அமைந்துள்ளதுடன், சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கு 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4