சிவாஜிலிங்கம் சுயநினைவிழந்த நிலையில் தீவிர சிகிச்சையில்
மூத்த தமிழ் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செப்டெம்பர் 02) சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.கே. சிவாஜிலிங்கம் தற்போது வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக பதவி வகித்து வருகிறார். அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நீண்டகாலமாக தமிழ் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவராகவும் உள்ளார்.
அவரது தற்போதைய உடல்நிலை தொடர்பில் மேலதிக மருத்துவத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அவரது உடல்நிலை விரைவில் முன்னேற அனைவரும் பிரார்த்திப்போம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே