நேபாள வெள்ளத்திற்கு அமெரிக்கா 40 தொன் நிவாரணம்
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதாபிமான அமைப்பான Samaritan’s Purse, 40 தொன்களுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்களை நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பியுள்ளது.
இந்த நிவாரணப் பொதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டும் உபகரணங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள், சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,600 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் சென்றடையும் வகையில், அப்பகுதிகளில் நேரடியாகப் பணியாற்றி வரும் உள்ளூர் அமைப்புகள் ஊடாக அவை விநியோகிக்கப்படவுள்ளன.
வெள்ளத்தால் வீடுகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், தற்காலிக தங்குமிடம், சுகாதார வசதிகள் மற்றும் இரவு நேர ஒளி வசதிகளை வழங்குவதில் இந்த நிவாரணப் பொருட்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நேபாள மக்களின் அவசரத் தேவைகளுக்கு ஏற்ப உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக, நேபாள அரசாங்கம் மற்றும் பல்வேறு பங்காளி அமைப்புகளுடன் அமெரிக்க தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதுடன், பேரிடருக்குப் பின்னரான மீட்பு நடவடிக்கைகளுக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து அவசியமாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே