ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ கொழும்பில் சடலமாக மீட்பு
கொழும்பு: ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (செப்டெம்பர் 02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் அவர் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன.
எனினும், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ 57 வயதுடையவர் எனவும், ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயராகப் பதவி வகித்தவர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே