பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு
#SriLanka
#Trincomalee
#LANKA4
#Rescue
#Girl
#Missing
#L4
Prasu
1 hour ago
பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய சர்மிளா மற்றும் சதுனி, 18 வயதுடைய கௌசல்யா ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே இம்மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் எதற்காக அங்கே சென்றார்கள் என்பது குறித்தும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்தும் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே