2024ம் ஆண்டு முதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 600 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
600 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, 2024ம் ஆண்டு தொடக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
113 விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், இந்தச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், 102 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ. 5.423 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட 03 குற்றவாளிகளிடமிருந்து மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ. 209 மில்லியன் ஆகும்.
இவர்கள் பிரமிட் திட்டங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ரூ. 367 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தின் விபரம்:
- ரூ. 1.437 பில்லியன் மதிப்புள்ள 55 வீடுகள்
- ரூ. 1.322 பில்லியன் மதிப்புள்ள 138 ஏக்கர் நிலம்
- ரூ. 1.171 பில்லியன் மதிப்புள்ள 142 வாகனங்கள்
- ரூ. 428 மில்லியன் கொண்ட 27 வங்கிக் கணக்குகள்
- ரூ. 168 மில்லியன் மதிப்புள்ள தங்கம்
- ரூ. 214 மில்லியன் மதிப்புள்ள 21 கடை வளாகங்கள்
- ரூ. 250 மில்லியன் மதிப்புள்ள 08 கட்டிடங்கள்
- ரூ. 305 மில்லியன் மதிப்புள்ள 12 பல நாள் மீன்பிடிப் படகுகள்
- ரூ. 239 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு இதர சொத்துக்கள்
- ரூ. 461 மில்லியன் ரொக்கம்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே