ரூ.80 பில்லியன் மின்சார ரயில் திட்டம்!
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், ரூ.80 பில்லியன் மதிப்பீட்டில் மின்சார ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் கொழும்பு மருதானை ரயில் நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மின்சார ரயில் திட்டம் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே