மட்டக்களப்பு கொம்மாதுரை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#SriLanka #Batticaloa #LANKA4 #Cricket #sports #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மட்டக்களப்பு கொம்மாதுரை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு: கொம்மாதுரை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபையினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விளையாட்டு உபகரணங்கள், சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதியுடன், விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதுடன், இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெற்றுக்கொடுப்பது சமூகப் பொறுப்பாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

திறமையான இளைஞர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான நாகேந்திரன் மற்றும் நிலாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொம்மாதுரை வட்டாரத்திற்கான பட்டியல் வேட்பாளராக போட்டியிட்டு, அடுத்த வருடம் பிரதேச சபை உறுப்பினராக வரவுள்ள சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர் அசோக் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4