ஃபின்டெக் ஃபெஸ்டிவல் 2026’ மூலம் டிஜிட்டல் நிதித்துறையில் புதிய அத்தியாயம்!
இலங்கையின் டிஜிட்டல் நிதித்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘இலங்கை ஃபின்டெக் ஃபெஸ்டிவல் 2026’ ஏற்பாடு செய்யப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து இலங்கை ஃபின்டெக் சங்கம் (FinTech Forum Sri Lanka) ஏற்பாடு செய்யும் இந்த இருநாள் நிகழ்வு, எதிர்வரும் நவம்பர் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நேற்று (25) கொழும்பு அமாரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
விழாவில் நிதித்துறையில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சொத்துக்கள், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்கள், டோக்கனாக்கம், டிஜிட்டல் அடையாளம், நிதி உள்ளடக்கம், சைபர் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடி தடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
நவம்பர் 02ஆம் திகதி ‘CEOs Night’ மற்றும் நவம்பர் 03ஆம் திகதி ‘Sri Lanka FinTech Expo’ ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், இறுதியாக ‘FinTech Night’ நிகழ்வுடன் விழா நிறைவடையவுள்ளது.
இந்த நிகழ்வு இலங்கையின் வளர்ந்து வரும் ஃபின்டெக் துறையை சர்வதேச மற்றும் பிராந்திய வாய்ப்புகளுடன் இணைப்பதற்கான முக்கிய தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே