உள் முரண்பாடுகளுக்கு இடமில்லை; நோயாளிகளுக்கே முன்னுரிமை – கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர்

#SriLanka #Hospital #Director #Kalmunai #LANKA4 #Patients #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 day ago
உள் முரண்பாடுகளுக்கு இடமில்லை; நோயாளிகளுக்கே முன்னுரிமை – கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் ஏற்படும் உள் முரண்பாடுகள், நோயாளிகளுக்கான சேவையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தொன்றின் பின்னர் இன்று (24) பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளை கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பணிமாற்றம் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட நிர்வாகச் சிக்கல்கள் காணப்பட்டாலும், வைத்தியசாலை சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதில் அனைத்து ஊழியர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“நோயாளிகளின் நலனே மருத்துவப் பணியின் பிரதான நோக்கம்” எனவும் டாக்டர் சுகுணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4