கட்டுநாயக்க இடமாற்றம்: நாடளாவிய ரீதியில் PHI போராட்டம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து தரவுகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதை இடைநிறுத்துவதுடன், அனைத்து தரவு அமைப்புகளையும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவுள்ளன.
மிகஸ்தெனியவின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளுக்கும் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பில் நியாயமான விசாரணைக்கும் பேச்சுவார்த்தைக்கும் தாம் தயாராக இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே