16 வயதுக்குப் பின் கல்வியைத் தொடரும் ஆண் பிள்ளைகள் எண்ணிக்கை வீழ்ச்சி – பிரதமர் ஹரிணி
நாட்டில் 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி தற்போது சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பிள்ளைகளைப் பாடசாலைக் கட்டமைப்புக்குள் தக்கவைத்துக்கொள்வது ஒரு பெரிய சவாலாக மாறிவருவதை அவதானித்துள்ளோம்.
குறிப்பாக, 16 வயதுக்குப் பிறகு கல்வியைத் தொடரும் சிறுவர்களின் குறிப்பாக ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் நேரம் தேவை.
அதற்காகவே விடுமுறை வழங்கப்படுகிறது.
பிள்ளைகளுக்கு மன அமைதியும் சுதந்திரமும் சுதந்திரமான இடமும் தேவை.
எனவே இந்த விடுமுறைக் காலத்தில் பிள்ளைகள் மீது அதிகப்படியான கல்வியியல் சுமைகளைச் சுமத்தவேண்டாம் என்று பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20)நடைபெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், எமது கொள்கை அறிவிப்பானது சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஒரு பரந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
பிள்ளைகளைப் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் சூழ்நிலைகளையும் நிலைமைகளையும் கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கான விரிவான தலையீடுகளை நடைமுறைப்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாகும்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் சட்ட திருத்தங்கள் இந்த பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். உதாரணமாக, வெவ்வேறு சட்டங்களில் 'சிறுவர்' என்பதற்கான வரைவிலக்கணத்தில் முரண்பாடுகள் காணப்பட்டதுடன், சில சரத்துக்கள் 15, 16, 17 அல்லது 18 ஆகிய வயதெல்லையைக் குறிப்பிடுகின்றன.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சட்டக் கட்டமைப்பிலும் பல இடைவெளிகள் உள்ளன. எமது அரசாங்கம் இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது, அதேவேளை பிள்ளைகளைப் பாதிப்புகளுக்கு உள்ளாக்கும் சூழ்நிலைகளை நிவர்த்தி செய்வதற்கான பரந்த நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
16 வயது வரையிலான கட்டாயக் கல்வி தற்போது சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிள்ளைகளைப் பாடசாலைக் கட்டமைப்புக்குள் தக்கவைத்துக்கொள்வது ஒரு பெரிய சவாலாக மாறிவருவதை நாம் அவதானித்துள்ளோம்.
குறிப்பாக, 16 வயதிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் சிறுவர்களின் குறிப்பாக ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது.
பிள்ளைகள் முழுமையான 13 வருட பாடசாலைக் கல்வியைப் பெறாதபோது, அவர்கள் சமூகத்திற்குள் நுழையும்போது பல்வேறு ஆபத்துகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடும்.
சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தீங்கான நடத்தைகள் மற்றும் எதிர்மறைச் நிலைக்கு ஆளாக நேரிடலாம். தேவையான திறன்கள் மற்றும் தகுதிகள் இன்றி தொழிற்படையில் நுழைவது, அவர்கள் சுரண்டப்படுவதற்கான வாய்ப்பை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த சவால்களைக் கருத்தில் கொண்டே, பாதுகாப்பான, ஆதரவான மற்றும் சாதகமான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் பிள்ளைகள் முழுமையான 13 வருட கல்வியிலும் பாடசாலைக் கட்டமைப்புக்குள் இருப்பதை உறுதி செய்வதை 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்த ஆண்டு, முதலாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
மேலும் 2027ஆம் ஆண்டில் தரம் 2 மற்றும் தரம் 6க்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாடத்திட்டச் சீர்திருத்தத்திற்கு இணையாக, பாடசாலைச் சூழலின் பாதுகாப்பு மற்றும் பொருத்தப்பாட்டை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஆரம்பக் கல்வியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் 1.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளை நவீனமயமாக்கல் மற்றும் பிள்ளைகளின் தேவைகளுக்குப் பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
பிள்ளைகள் தங்களது குடும்பம் மற்றும் சமூகச் சூழலில் ஏற்படும் சவால்களால் பல்வேறு உள சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
இவ்வாறான கவலைகளைப் பற்றி விவாதிக்கவும் நிவர்த்தி செய்யவும் பிள்ளைகளுக்குப் பொருத்தமான வாய்ப்புகள் இல்லாதபோது, அது அவர்களின் மனநலனையும் அவர்களின் கல்வியைச் வெற்றிகரமாகத் தொடரும் திறனையும் மோசமாகப் பாதிக்கலாம்.
அதற்கேற்ப, பாடசாலைக் கட்டம் திட்டம் அனைத்துப் பாடசாலைகளிலும் இவ்வாறான நிலையங்களை நிறுவும் நோக்கத்துடன் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையங்கள் ஆலோசனைச் சேவைகளை வழங்குவதோடு, பிள்ளைகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தவும், உதவியை நாடவும், அமைதியான சூழலில் நேரத்தைச் செலவிடவும் அல்லது பாதுகாப்பாக உணரும் ஒரு இடத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னோடித் திட்டம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளதாகப் ப மைப்பிற்குள் பிள்ளைகளின் உளசமூக நலனை வலுப்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டில் ஒரு பிரத்யேக திட்டத்தைத் தொடங்கினோம்.
இத்திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்களின் ஆதரவிற்கும் அர்ப்பணிப்பிற்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டத்திற்கான ஆசிரியர் பயிற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
சிறுவர் பாதுகாப்பைப் கல்வித் துறையோடு அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலையீட்டுப் பகுதியோடு மட்டும் முடக்கிவிட முடியாது. பிள்ளைகள் இருக்கும் சூழல்களில் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே