கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட ராணுவ அதிகாரி உட்பட எட்டு பேர் கைது

#SriLanka #Arrest #LANKA4 #Mine #Military #officer #L4
Prasu
2 hours ago
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட ராணுவ அதிகாரி உட்பட எட்டு பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு 55ம் கட்டை பகுதியில் 8 பேர் கொண்ட குழுவினர் புதையல் தோண்ட முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/1787249056.jpg

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/1787249078.jpg

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்கள்கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4