கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக மாற்றம்!

#SriLanka #Colombo #Tourist #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
59 minutes ago
கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக மாற்றம்!

கொழும்பு கோட்டையின் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாத்து, சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், 8 கவர்ச்சிகரமான சுற்றுலா வலயங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரலாற்று கட்டிடங்களைப் பாதுகாத்தல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல், கால்வாய்களை புனரமைத்தல் மற்றும் கொழும்பு துறைமுகம், துறைமுக நகரம் ஆகியவற்றுடன் சுற்றுலா இணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முழுமையான திட்டத்தை தயாரித்து, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4