கல்முனையில் இடியப்ப விற்பனை போர்வையில் கஞ்சா விற்பனை!
#SriLanka
#Kalmunai
#LANKA4
#Cannabis
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
சிற்றுண்டி விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீட்டின் நான்காம் மாடி மொட்டை மாடியில் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே