கல்முனை சீருடை விவகாரம்: 9 பெண் ஊழியர்களின் இடமாற்றத்தை மீளப்பெற சஜித் கோரிக்கை!
கல்முனை வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டமை பொருத்தமற்ற நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள அனைத்து மத மற்றும் கலாச்சாரப் பிரிவினருக்கும் தமது மத, கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சீருடை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஊழியர்களை இடமாற்றுவது, இனம், மதம் உள்ளிட்ட அடிப்படைகளில் பாரபட்சமின்றிச் செயற்படுவதாக அரசாங்கம் முன்வைத்த கொள்கைக்கு முரணானது என்றும் அவர் விமர்சித்தார்.
எனவே, இடமாற்றம் செய்யப்பட்ட 9 ஊழியர்களையும் மீண்டும் அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே நியமித்து, சீருடை தொடர்பான பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே