சீருடை சர்ச்சை: 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களும் அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம்!

#SriLanka #Health #Hospital #Muslim #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சீருடை சர்ச்சை: 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களும் அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் நேற்று (18) மாலை கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின் பின்னர், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பி. ஸ்ரீ சங்கர், ஒன்பது பேருக்கும் தனித்தனியாக இடமாற்றக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் சேவைத் தேவையின் அடிப்படையில் இந்த உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த 9 சுகாதார உதவியாளர்களும் இன்று (19) கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4