சீனாவில் இயற்கை சீற்றங்களை மகிழ்ச்சியுடன் கண்டு மகிழும் மக்கள்
சீனாவில் இயற்கை சீற்றங்களை செயற்கையாக அனுபவிக்கும் புதுவித கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது.
‘டார்க் டூரிசம் என அழைக்கப்படும் இந்த சாகசம் ஹங்சோ நகரில் அமைந்துள்ளது. பிரபல சீனப் பெண் மற்றும் ஆண் சாகசப் பயணிகளான சாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த மையம், குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் செயற்கைப் புயல், கனமழை, மற்றும் திடீர் நகர்ப்புற வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்தான சூழல்கள் அப்படியே உருவாக்கப்படுகின்றன.
இங்கு வருபவர்கள் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து, தப்பிக்கும் வழிமுறைகளை கற்றுக்கொள்கிறார்கள்.
இதேவேளை இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,60,000க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே