கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொடரும் அமைதிப் போராட்டம்!
#SriLanka
#Protest
#Hospital
#Kalmunai
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாகப் பணியில் இணைந்த 9 பெண் சிற்றூழியர்களின் நியமனம் மற்றும் ஆடை தொடர்பான விவகாரம் குறித்து எழுந்துள்ள நிர்வாகச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வை வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக, நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், பொறுப்புணர்வுடன் அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே