நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மகாநாயக்க தேரர்கள் முழு ஆசி – பிரதி அமைச்சர்

#SriLanka #Minister #Lanka4 #Judge #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மகாநாயக்க தேரர்கள் முழு ஆசி – பிரதி அமைச்சர்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்களின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதி அமைச்சர் தினிது சமன் குமார தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது, இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவர்கள் திறந்த மனதுடன் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் செல்ல விரும்பியிருந்தால், அதற்கு ஏற்கனவே பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசீர்வாதத்துடனான வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், எனவே எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4